மூன்றாவது அலை தாக்குமா? விஞ்ஞானிகள் கூறுவது என்ன?

 
third wave

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையும் தற்போது இரண்டாவது அலையும் பரவிவரும் நிலையில் அடுத்த ஆண்டு அல்லது இந்த ஆண்டு இறுதியில் மூன்றாவது அலை தாக்கும் என்று கூறப்படுகிறது. மூன்றாவது அலையை இந்தியாவில் தவிர்க்க முடியாது என ஏற்கனவே விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். எனவே மூன்றாவது அலைக்கு பொதுமக்கள் தயாராகும் வகையில் மத்திய மாநில அரசுகள் ஏற்பாடு செய்யவேண்டும் என்று கூறப்படுகிறது

வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் மூன்றாவது அலை தாக்கும் என்றும் மூன்றாவது அலையால் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. எனவே நாட்டில் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி மருந்து சோதனைகள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

மேலும் குழந்தைகளை கொரோனா வைரஸ் தாக்கினால் அவர்களுக்கு என தனி வார்டு துவங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு உடனுக்குடன் சிகிச்சை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தாக்கம் தொடங்கும் முன்பாகவே பெரும்பாலானவர்களுக்கு தடுப்பூசியை போடும் பணியை முடித்து விட்டால் கொரோனா மூன்றாவது அலையில் இருந்து எளிதில் தப்பி விடலாம் என மருத்துவர்கள் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

From around the web