தடுப்பூசி கண்டுபிடித்த பின்னர் தான் பள்ளிகள் திறக்கப்படுமா? பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் பள்ளிகள் மீண்டும் எப்போது தொடங்கும்? இந்த கல்வி ஆண்டு எப்போது தொடங்கும்? என்பது குறித்த தகவல் எதுவும் இல்லாமல் உள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர் இந்த நிலையில் பள்ளிகளை ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய மூன்று
 

தடுப்பூசி கண்டுபிடித்த பின்னர் தான் பள்ளிகள் திறக்கப்படுமா? பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் பள்ளிகள் மீண்டும் எப்போது தொடங்கும்? இந்த கல்வி ஆண்டு எப்போது தொடங்கும்? என்பது குறித்த தகவல் எதுவும் இல்லாமல் உள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்

இந்த நிலையில் பள்ளிகளை ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய மூன்று மாதங்களில் எந்த மாதங்களில் திறக்கலாம் என்பது குறித்த கருத்துகளை பெற்றோரிடமிருந்து கேட்க சமீபத்தில் மனிதவளத்துறை மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்து ஒரு இமெயில் ஒன்றை அறிவித்து அந்த ஈமெயிலில் பெற்றோர்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவிக்கலாம் என்று அறிவித்தது

இந்த நிலையில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் தகவலின்படி பெரும்பாலான பெற்றோர்கள் தடுப்பூசி கண்டுபிடித்த பின்னரே பள்ளிகள் திறக்க வேண்டும் என்று கருத்துக் கூறி இருப்பதாக தெரிகிறது. இதனை மனிதவள அமைச்சகம் ஏற்றுக்கொண்டு தடுப்பூசி கண்டுபிடித்த பின்னரே பள்ளிகளை திறக்க அனுமதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சமீபத்தில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்தத தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தத் தடுப்பூசிகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்த பின்னர் அதன் விளைவுகள் எப்படி உள்ளது என்பதை பார்த்த பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் பள்ளிகள் திறக்க இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என தெரிகிறது

From around the web