7 மாநிலங்களில் இன்றுமுதல் பள்ளிகள் திறப்பு!

 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு செப்டம்பர் 21 முதல் பள்ளிகள் திறக்க என்று அனுமதி வழங்கியது 

இந்த அனுமதியை அடுத்து தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திரா உள்பட 7 மாநிலங்களில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இருப்பினும் மாணவர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டும் என்பது அவசியமில்லை என்றும் வருகைப்பதிவேடு இல்லை என்றும், விருப்பப்படும் மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து வரவேண்டும் என்றும் தனிமனித இடைவெளியுடன் 50 சதவீத மாணவர்கள் மட்டுமே வகுப்புகளில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கிருமிநாசினி உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது

இன்று முதல் ஆந்திரா பிரதேசம், அஸ்ஸாம், ஹரியானா, ஜம்மு காஷ்மீர், நாகலாந்து மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய ஆகிய ஏழு மாநிலங்களில் திறக்கப்படுவதை அடுத்து தமிழகத்திலும் பள்ளிகள் விரைவில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

From around the web