பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் திறக்கும் தேதி: தமிழக அரசு அறிவிப்பு

 
பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் திறக்கும் தேதி: தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பள்ளி கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது பள்ளி கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் திறக்கும் தேதியை தமிழக அரசு அறிவித்துள்ளது

இன்றுடன் ஊரடங்கு முடிவடைந்ததை அடுத்து அடுத்தகட்ட ஊரடங்கு நவம்பர் மாதம் முப்பதாம் தேதி வரை நீடிக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் பள்ளி மற்றும் கல்லூரிகள் நவம்பர் 16 முதல் செயல்பட அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுடன் நவம்பர் 10ஆம் தேதி முதல் திறக்கலாம் என்றும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து சினிமா ரசிகர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இதுவரை படப்பிடிப்புக்கு 100 பேர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இனி 150 பேர் வரை படப்பிடிப்பில் கலந்து கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது

மேலும் நவம்பர் 2-ம் தேதி முதல் கோயம்பேட்டில் பழக்கடை மொத்த வியாபாரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள தமிழக அரசு, காய்கறி சில்லறை வியாபாரக் கடைகள் வரும் 16ஆம் தேதி முதல் செயல்படலாம் என்றும் தெரிவித்துள்ளது

மேலும் அனைத்து கல்லூரிகள் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் நவம்பர் 16ம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படுவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் தமிழகம் கிட்டத்தட்ட முழு இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதாகவே கருதப்படுகிறது

From around the web