வாரத்தில் 2 நாட்கள்தான் பள்ளிக்கூடம்… மத்திய அரசு எடுத்துள்ள முடிவு!!

இந்தியாவில் மார்ச் மாதத் துவக்கத்தில் உருவான கொரோனா வைரஸ் துவக்கத்தில் மிதமாகவே பரவி வந்தது. இதனைக் கட்டுக்குள் வைக்க, மார்ச் 24 ஆம் தேதி துவங்கி மே 31 ஆம் தேதி வரை 4 கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் வருகிற ஞாயிற்றுக் கிழமையோடு ஊரடங்கானது முடியவுள்ள நிலையில் மிகப் பெரிய பாதிப்பினை சந்தித்துவரும் 11 நகரங்களில் மீண்டும் 5 ஆம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மற்ற இடங்களில் கூடுதலாக தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று
 
வாரத்தில் 2 நாட்கள்தான் பள்ளிக்கூடம்… மத்திய அரசு எடுத்துள்ள முடிவு!!

இந்தியாவில் மார்ச் மாதத் துவக்கத்தில் உருவான கொரோனா வைரஸ் துவக்கத்தில் மிதமாகவே பரவி வந்தது. இதனைக் கட்டுக்குள் வைக்க, மார்ச் 24 ஆம் தேதி துவங்கி மே 31 ஆம் தேதி வரை 4 கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் வருகிற ஞாயிற்றுக் கிழமையோடு ஊரடங்கானது முடியவுள்ள நிலையில் மிகப் பெரிய பாதிப்பினை சந்தித்துவரும் 11 நகரங்களில் மீண்டும் 5 ஆம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

வாரத்தில் 2 நாட்கள்தான் பள்ளிக்கூடம்… மத்திய அரசு எடுத்துள்ள முடிவு!!

மற்ற இடங்களில் கூடுதலாக தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகின்றது. அந்தவகையில் விமான போக்குவரத்து மற்றும் பள்ளி, கல்லூரிகள் திறப்புகளில் தளர்வுகள் இருக்கும் என்று கூறப்படுகின்றது.

அதன்படி இந்த ஒரு ஆண்டு மட்டும், பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து இயங்க வேண்டியதில்லை என்றும் ஒருநாள் விட்டு ஒருநாள் சுழற்சி முறையினால் நடத்தினால் போதுமானது என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்போது வரையில் ஆலோசிக்கப்பட்டுள்ள விதிமுறைகள்:

1.    100 நாட்களில்  600 மணி நேரம் கல்வி கற்றல்,

2.    வகுப்பறைகளில் 30 முதல் 50 சதவீத மாணவர்களுடன் வகுப்புகள் நடத்துதல்,

3.    1 முதல் 5 ஆம் வகுப்புக்கு மாணவர்கள்- 2 நாட்கள் வகுப்பு

4.    6 முதல் 8 ஆம் வகுப்புக்கு மாணவர்கள் – 4 நாட்கள் வகுப்பு

5.    9 முதல் 12 ஆம் வகுப்புக்கு மாணவர்கள் – 5 நாட்கள் வகுப்பு

இந்தத் திட்டத்தின் அடிப்படையில் பள்ளிகள் இயங்கலாம் என்று கூறப்படுகின்றது.

From around the web