நாளை முதல் ஹரியானாவில் பள்ளிகளுக்கு விடுமுறை!கொரோனா காரணம் இல்ல!

கோடை காலத்தை ஒட்டி நாளை முதல் மே 31-ஆம் தேதி வரை அரியானாவில் பள்ளிகளுக்கு விடுமுறை!
 
நாளை முதல் ஹரியானாவில் பள்ளிகளுக்கு விடுமுறை!கொரோனா காரணம் இல்ல!

மக்கள் மத்தியில் கோடை காலம் என்றால் அனைவருக்கும் நினைவில் வருவது மே மாதம் தான். இந்த மே மாதம் தொடங்க இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் கோடை காலம் தொடங்கினால் மக்கள் அனைவரும் மிகவும் சோகத்தில் இருப்பர். மேலும் கோடை காலம் தொடங்கினால் அனைத்து பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தமிழகத்தில் விடுமுறை அளிக்கப்படும். தற்போது கோடைக்காலம் மட்டுமின்றி தமிழகத்தில் பல மாதங்களாக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறையில் உள்ளதாக காணப்படுகிறது.

kanwar

காரணம் என்னவெனில் கண்ணுக்கு தெரியாத கொரோனா தாக்கம் கடந்த ஆண்டில் இந்தியாவில் வரத்தொடங்கியது. மேலும் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின்னர் தமிழகத்தில் கொரோனா பரவ தொடங்கியது. இதனால் தமிழகத்தில் உள்ள பல பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் இந்த கோடை வெயில் தாக்கமானது தமிழகம் மட்டுமின்றி வட இந்தியாவில் மிகவும் அதிகமாக காணப்படும்.

மேலும் இதனால் பல மாநிலங்களில் குடிநீர் பற்றாக்குறையும் ஏற்படும் நிலையில் தற்போது ஹரியானாவில்  பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி ஹரியானா மாநிலத்தில் நாளைமுதல் மே 31-ஆம் தேதி வரை மாணவர்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது காரணம் அங்கு கோடைகாலத்தை தொடங்கியதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தார் அமைச்சர் கன்வார்.

From around the web