"புலமைப்பித்தன் மறைவு" ஓபிஎஸ்-இபிஎஸ்  இரங்கல்!!

அதிமுக முன்னாள் அவைத் தலைவர் புலவர் புலமைபித்தன் மறைந்த செய்தி கேட்டு வருத்தமுற்றேன்
 
eps ops

தற்போது நம் தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ளது திமுக. இதற்கு முன்பு வரை தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்தது அதிமுக. மேலும் அவை பத்தாண்டுகளாக தமிழகத்தில் தொடர்ச்சியாக ஆட்சி செய்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த 10 ஆண்டுகளில் அதிமுக சார்பில் 3 முதலமைச்சர்கள் மாறி ஆட்சி செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.முதலாவதாக மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா. அவரின் மறைவுக்குப் பின்னர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம்.pulaimaipithan

அதற்கிடையே கட்சியில் சில மாற்றங்கள் ஏற்பட்டு கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த நிலையில் இவர்கள் சமரசமாக இருந்து கட்சியை ஒருங்கிணைத்து வழிநடத்தினர். இத்தகு அதிமுகவிற்கு தற்போது மேலும் ஒரு சோகமான தகவல் காணப்படுகிறது. அதன்படி அதிமுக முன்னாள் அவைத் தலைவர் புலவர் புலமைபித்தன் மறைந்தார்.

மேலும் அவரின் மறைவை கேட்டு வருத்தமுற்றோம்  என்று ஓபிஎஸ் இபிஎஸ் கூறியுள்ளனர். எண்ணற்ற திரைப்படங்களுக்கு காலத்தால் அழியாத பாடல்களை எழுதி புகழ் பெற்றவர் புலமைப்பித்தன் என்றும் அதிமுக கூறியுள்ளது .புலமைபித்தன் இழந்து வாடும் அவர் குடும்பத்திற்கு இரங்கல் அனுதாபம் கூறிக் கொள்கிறோம் என்று ஓபிஎஸ் இபிஎஸ் கூறியுள்ளனர்.

From around the web