ஓட்டின் மீதேறி உட்கார்ந்து ஆன்லைன் வகுப்பு அட்டெண்ட் செய்த கல்லூரி மாணவி

கேரளாவில் கல்லூரி மாணவி ஒருவர் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முயற்சிக்கையில் சிக்னல் சரியாக கிடைக்காததால் ஓட்டின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு ஆன்லைன் வகுப்புகளை கவனித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது கேரளாவைச் சேர்ந்த கொட்டக்கால் என்ற பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவிக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவருடைய வீடு இருக்கும் பகுதியில் இன்டர்நெட் சிக்னல் சரியாக கிடைக்கவில்லை. இதனை அடுத்து அவர் தனது முதல் மாடிக்கு மேல் உள்ள ஓட்டின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு
 

ஓட்டின் மீதேறி உட்கார்ந்து ஆன்லைன் வகுப்பு அட்டெண்ட் செய்த கல்லூரி மாணவி

கேரளாவில் கல்லூரி மாணவி ஒருவர் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முயற்சிக்கையில் சிக்னல் சரியாக கிடைக்காததால் ஓட்டின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு ஆன்லைன் வகுப்புகளை கவனித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

கேரளாவைச் சேர்ந்த கொட்டக்கால் என்ற பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவிக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவருடைய வீடு இருக்கும் பகுதியில் இன்டர்நெட் சிக்னல் சரியாக கிடைக்கவில்லை. இதனை அடுத்து அவர் தனது முதல் மாடிக்கு மேல் உள்ள ஓட்டின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு ஆன்லைன் வகுப்புகளை கவனித்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இதற்காக அவருடைய பெற்றோர்கள் பிரத்யேகமாக இரும்பு ஏணி ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளதாகவும், ஒருசில ஓடுகள் உடைந்த போதும் அதைப் பற்றி கவலைப்படாமல் மகளின் படிப்பிற்காக அவருடைய பெற்றோர்கள் உதவி செய்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் அந்த கல்லூரி மாணவிக்கு மழை மற்றும் வெயிலுக்காக ஒரு கையில் குடையை பிடித்துக்கொண்டு இன்னொரு கையில் செல்போனை வைத்துக்கொண்டு ஆன்லைனில் வகுப்பு படித்தது அந்த பகுதியில் உள்ளவர்களை ஆச்சரியப்படுத்தியது

From around the web