16,000 சொல்லி அடுத்து 17,000 நெருங்கப் போகிறது கொரோனா!

தமிழகத்தில் ஒரே நாளில் 16 ஆயிரத்து 665 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக பட்டதாக கூறப்படுகிறது!
 
16,000 சொல்லி அடுத்து 17,000 நெருங்கப் போகிறது கொரோனா!

தமிழகத்தில் எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற நிலைமை இருந்த நிலையில் தற்போது எங்கும் கொரோனா எதிலும் கொரோனா என்ற நிலைமைதான் தமிழகத்தில் உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள மக்கள் மிகுந்த அவதிப்படுகின்றனர். மேலும் தமிழகத்தில் இந்நோயின் தாக்கம் ஆனது சில தினங்களாக ஆயிரக்கணக்கில் அதிகரித்து தமிழக மக்களை மிகவும் பாதிக்கிறது. மேலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் இந்நோயின் தாக்கம் ஆனது ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது.corona

அதன்பின்னர் செங்கல்பட்டு கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களில் கொரோனா நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்நிலையில் சில தினங்களாக கொரோனா நோயானது தமிழகத்தை 16 ஆயிரத்து எட்டும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது 16,000 கடந்து மக்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்துள்ளது. அந்த படி தமிழகத்தில் கடந்த ஒரே நாளில் கொரோனா நோயானது 16665 பேருக்கு கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இதில் பாதிப்படைந்த 16605 பேரில் 512 பேர் 15 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் என்பதும் வேதனையாக உள்ளது. மேலும் அதனை தொடர்ந்து தற்பொழுது கொரோனா மரணமானது சதமடிக்க உள்ளதாக காணப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி 98 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் இதுவரை 13 ஆயிரத்து 826 பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.இதனால் தமிழகத்தில் நாளுக்கு நாள் இந்த கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது.

From around the web