சிபிசிஐடி கட்டுப்பாட்டிற்குள் வந்தது சாத்தான்குளம் காவல்நிலையம்

சாத்தான்குளம் செல்போன் கடை வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்நிலையத்தில் மர்மமான முறையில் மரணமடைந்த விவகாரம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த நிலையில் நேற்று மதுரை ஐகோர்ட் கிளையின் உத்தரவின்படி சிபிசிஐடி போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் டிஎஸ்பி அனில்குமார் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வருவதால் மிக விரைவில் இந்த இரட்டை மரணத்திற்கு காரணமானவர்கள் நீதியின் முன் தண்டிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் சாத்தான்குளம் காவல்
 

சிபிசிஐடி கட்டுப்பாட்டிற்குள் வந்தது சாத்தான்குளம் காவல்நிலையம்

சாத்தான்குளம் செல்போன் கடை வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்நிலையத்தில் மர்மமான முறையில் மரணமடைந்த விவகாரம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த நிலையில் நேற்று மதுரை ஐகோர்ட் கிளையின் உத்தரவின்படி சிபிசிஐடி போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

டிஎஸ்பி அனில்குமார் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வருவதால் மிக விரைவில் இந்த இரட்டை மரணத்திற்கு காரணமானவர்கள் நீதியின் முன் தண்டிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் ஒட்டுமொத்தமாக இடமாற்றம் மற்றும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே

இதனை அடுத்து தற்போது சாத்தான்குளம் காவல் நிலையத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் சிபிசிஐடி கொண்டுவந்துள்ளது. சாத்தான்குளம் காவல் நிலையத்திற்குள் யாரும் நுழைய முடியாத வகையில் காவல் நிலைய வாசலின் குறுக்கே சிபிசிஐடி போலீசார் தடுப்பு அமைத்து உள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சாத்தான்குளம் இரட்டை மரணத்தை சிபிஐ விசாரிக்க முன்னரே சிபிசிஐடி இந்த வழக்கை முடித்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web