சாத்தான்குளம் வழக்கை ஏற்றது சிபிஐ: மத்திய அரசு அறிக்கை வெளியிட்டதாக தமிழக அரசு தகவல்

உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு முதலமைச்சர் பழனிசாமி எழுதிய பரிந்துரை கடிதத்தை ஏற்று சாத்தான்குளம் வழக்கை சிபிஐ விசாரிக்க மத்திய அரசு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது என தமிழக அரசு சற்றுமுன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த திரு.ஜெயராஜ் மற்றும் திரு. பென்னிக்ஸ் ஆகியோர் மரணம் குறித்து மத்திய புலனாய்வு துறை சிபிஐ மூலம் விசாரிக்கப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, மத்திய உள்துறை அமைச்சர்
 
வெளிநாடு செல்ல முயன்ற போது பிரனாய் ராய், ராதிகா ராயை தடுத்து நிறுத்தி சிபிஐ விசாரணை..!

சாத்தான்குளம் வழக்கை ஏற்றது சிபிஐ: மத்திய அரசு அறிக்கை வெளியிட்டதாக தமிழக அரசு தகவல்

உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு முதலமைச்சர் பழனிசாமி எழுதிய பரிந்துரை கடிதத்தை ஏற்று சாத்தான்குளம் வழக்கை சிபிஐ விசாரிக்க மத்திய அரசு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது என தமிழக அரசு சற்றுமுன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தூத்துக்குடி மாவட்டம்‌, சாத்தான்குளம்‌ பகுதியைச்‌ சேர்ந்த திரு.ஜெயராஜ்‌ மற்றும்‌ திரு. பென்னிக்ஸ்‌ ஆகியோர்‌ மரணம்‌ குறித்து மத்திய புலனாய்வு துறை சிபிஐ மூலம்‌ விசாரிக்கப்படும்‌ என்று மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அறிவித்திருந்தார்‌. அதன்‌ தொடர்ச்சியாக, மத்திய உள்துறை அமைச்சர்‌ திரு.அமித்ஷா அவர்களுக்கு கடிதம்‌ ஒன்றை எழுதினார்‌.

தூத்துக்குடி மாவட்டம்‌, சாத்தான்குளம்‌ பகுதியைச்‌ சேர்ந்த திரு.ஜெயராஜ்‌ மற்றும்‌ திரு.பென்னிக்ஸ்‌ மரணம்‌ குறித்து மத்திய புலனாய்வு துறை சிபிஐ விசாரிக்க மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ விடுத்த
கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு தற்போது அறிவிக்கையை வெளியிட்டுள்ளது’ என தமிழக அரசின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்த நிலையில் தற்போது சிபிசிஐடி இந்த வழக்கை விசாரணை செய்து வருகிறது என்பதும், இதுவரை ஒரு இன்ஸ்பெக்டர் உள்பட ஐந்து காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

சாத்தான்குளம் வழக்கை ஏற்றது சிபிஐ: மத்திய அரசு அறிக்கை வெளியிட்டதாக தமிழக அரசு தகவல்

From around the web