தூத்துக்குடி எஸ்.பி. திடீர் டிரான்ஸ்பர்: சிபிசிஐடி விசாரிக்க மதுரை கோர்ட் உத்தரவு

சாத்தான்குளம் தந்தை மகன் வியாபாரிகள் லாக்கப்பில் மர்மமான முறையில் மரணம் அடைந்தது குறித்த சம்பவம் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவை உலுக்கி உள்ளது என்று கூறலாம். இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டு அடுத்தடுத்து வெளியிட்ட உத்தரவு காரணமாக சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் இரண்டு உதவி ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அது மட்டுமன்றி ஒரு சில காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் தற்போது தூத்துக்குடி எஸ்பி அருண்
 
தூத்துக்குடி எஸ்.பி. திடீர் டிரான்ஸ்பர்: சிபிசிஐடி விசாரிக்க மதுரை கோர்ட் உத்தரவு

சாத்தான்குளம் தந்தை மகன் வியாபாரிகள் லாக்கப்பில் மர்மமான முறையில் மரணம் அடைந்தது குறித்த சம்பவம் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவை உலுக்கி உள்ளது என்று கூறலாம். இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டு அடுத்தடுத்து வெளியிட்ட உத்தரவு காரணமாக சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் இரண்டு உதவி ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அது மட்டுமன்றி ஒரு சில காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் தற்போது தூத்துக்குடி எஸ்பி அருண் பாலகோபாலன் என்பவரும் டிரான்ஸ்பர் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து விழுப்புரம் எஸ்பி ஆக இருந்த ஜெயக்குமார் தற்போது தூத்துக்குடி எஸ்பி ஆக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்

மேலும் சாத்தான்குளம் வியாபாரிகள் மரணமடைந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் என தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்ட நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும் என மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்

டிஎஸ்பி அனில் குமார் என்பவரின் தலைமையில் சிபிசிஐடி குழு தற்காலிகமாக சாத்தான்குளம் வழக்கை விசாரிக்கும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த வழக்கை பொறுத்தவரை சிபிஐக்கு சென்றால் கால தாமதமாகும் என்றும் இந்த வழக்கில் நீதி கிடைக்க காலதாமதம் ஆகக்கூடாது என்பதால் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web