சாத்தான்குளம் வழக்கு சிபிஐக்கு செல்கிறதா? நீதிமன்றத்தின் அதிரடி முடிவு

சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை வைத்திருந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஃபென்னிக்ஸ் ஆகியோர் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர் இந்த லாக்கப் டெத் குறித்து தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்த நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக
 
சாத்தான்குளம் வழக்கு சிபிஐக்கு செல்கிறதா? நீதிமன்றத்தின் அதிரடி முடிவு

சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை வைத்திருந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஃபென்னிக்ஸ் ஆகியோர் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர்

இந்த லாக்கப் டெத் குறித்து தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்த நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நீதிமன்றத்தின் கருத்தை கேட்டு இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுவது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் சற்று முன்னர் சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் குறித்த வழக்கை சிபிஐக்கு மாற்ற முறையாக அனுமதி கோரி தமிழக அரசை நீதிமன்றத்தில் முறையீடு செய்தது.

இந்த முறைகேடு குறித்து கருத்து தெரிவித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் அரசின் கொள்கை முடிவிற்கு நீதிமன்ற அனுமதி தேவையில்லை என்றும் மாநில அரசு முடிவெடுத்தால் அதில் நீதிமன்றம் தலையிடாது என்றும் கூறி வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தது

இதனையடுத்து இந்த வழக்கு சிபிஐக்கு செல்லவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web