சாத்தான்குளம் வழக்கு: அடுத்த 5 போலீசாரை காவலில் எடுக்க சிபிஐ திட்டம்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் ஏற்கனவே ஐந்து போலீசாரை காவலில் எடுத்து விசாரணையை முடித்துவிட்ட நிலையில் அடுத்த 5 போலீசாரை காவலில் எடுக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது அடுத்த 5 போலீசாரை காவலில் எடுக்க வரும் திங்கள் கிழமை சிபிஐ மனுத் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. எஸ்.ஐ பால்துரை, காவலர்கள் தாமஸ், செல்லத்துரை, சாமத்துரை, வெயில்முத்து ஆகியோரை காவலில் எடுக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது இந்த நிலையில் மீதமுள்ள புகைப்படங்கள், தடயங்கள் உள்ளிட்ட ஆவணங்களை
 
சாத்தான்குளம் வழக்கு: அடுத்த 5 போலீசாரை காவலில் எடுக்க சிபிஐ திட்டம்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் ஏற்கனவே ஐந்து போலீசாரை காவலில் எடுத்து விசாரணையை முடித்துவிட்ட நிலையில் அடுத்த 5 போலீசாரை காவலில் எடுக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது

அடுத்த 5 போலீசாரை காவலில் எடுக்க வரும் திங்கள் கிழமை சிபிஐ மனுத் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

எஸ்.ஐ பால்துரை, காவலர்கள் தாமஸ், செல்லத்துரை, சாமத்துரை, வெயில்முத்து ஆகியோரை காவலில் எடுக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் மீதமுள்ள புகைப்படங்கள், தடயங்கள் உள்ளிட்ட ஆவணங்களை சிபிஐயிடம், சிபிசிஐடி டி.எஸ்.பி. அனில்குமார் ஒப்படைக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

கைது செய்யப்பட்ட மொத்தம் 10 பேர்களையும் விசாரணை செய்தபின்னர் சிபிஐயின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதே தற்போதைய அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது

From around the web