சாத்தான் குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் அனைவரும் கைது: சிபிசிஐடி ஐஜி தகவல்

சாத்தான் குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய போலீசார் அனைவரும் கைது என சிபிசிஐடி ஐஜி தகவல் தெரிவித்துள்ளார். சாத்தான் குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மொத்தம் நான்குபேர் மீது கொலைக்குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டனர் என்றும், அவர்கள் எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், எஸ்,.ஐ. ரகுகணேஷ், தலைமை காவலர் முருகன் என்றூம் இந்த வழக்கில் ஐந்தாவதாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் பெயர் சேர்க்கப்பட்டு அவரும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும்
 

சாத்தான் குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் அனைவரும் கைது: சிபிசிஐடி ஐஜி தகவல்

சாத்தான் குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய போலீசார் அனைவரும் கைது என சிபிசிஐடி ஐஜி தகவல் தெரிவித்துள்ளார்.

சாத்தான் குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மொத்தம் நான்குபேர் மீது கொலைக்குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டனர் என்றும், அவர்கள் எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், எஸ்,.ஐ. ரகுகணேஷ், தலைமை காவலர் முருகன் என்றூம் இந்த வழக்கில் ஐந்தாவதாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் பெயர் சேர்க்கப்பட்டு அவரும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் சிபிசிஐடி ஐஜி சங்கர் பேட்டியில் கூறியுள்ளார்.

எனவே இந்த வழக்கில் முதல்கட்ட விசாரணைக்குப் பிறகு முக்கிய நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாகவும், எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழக அரசுக்கும் நீதிமன்றத்திற்கு நன்றி என்றும் ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் ஐஜி சங்கர் தெரிவித்தார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன் ஆகியோர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவர் என தெரிகிறது. சப் இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ் ஏற்கனவே மாஜிஸ்திரேட் முன் ஆஜர்செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்ப்பிடத்தக்கது

From around the web