வாக்காளர் பட்டியலில் சசிகலாவின் பெயர் இல்லை!தேர்தல் ஆணையத்திடம்முறையீடு!

சட்டமன்ற தமிழகத்தில் நடைபெறும் சில மணி நேரத்தில் நடைபெற உள்ளது.தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் வேலைகளில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அனைத்து பகுதிகளுக்கும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்கு இயந்திரங்கள், விவிபேட் போன்றவைகள் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டு வருகின்றன.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியாகிய சின்னம்மா என்று அழைக்கப்படும் சசிகலாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை .அதனால் இவர் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியாத சூழ்நிலையில் உள்ளது, அவர்கள் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளனர். அதன்படி மேலும் அவர்கடந்த 30 ஆண்டுகளாக போயஸ் கார்டன் முகவரி மூலம் ஆயிரம்விளக்கு தொகுதியில் வாக்களித்திருந்தார்.
அவர் 2017 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றார். அதன்பின்னர் போயஸ்கார்டன் அரசு அடிமையானதால் சசிகலா, இளவரசி உள்ளிட்ட 19 பெயர்களும் வாக்காளர் பட்டியல் இருந்து விலகியது. இதற்காக வழக்கறிஞர்கள் சசிகலாவின் பெயர் விலகியது தேர்தல் ஆணையத்திடம்முறையீடு செய்துள்ளனர். ஆயிரம் விளக்கு தொகுதியில் அமமுகவின் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வைத்தியநாதன் தேர்தல் ஆணையத்திடம் முறையீடு செய்துள்ளார். மேலும் அவர் ஆயிரம் விளக்கு தொகுதியில் அமமுக தொண்டர்களின் 19,000 பேர் பெயர்கள் நீக்கப்பட்டதும் புகார் அளித்துள்ளார். இதனால் ஆயிரம் விளக்கு தொகுதியில் தேர்தலை ரத்து செய்யவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.