விக்டோரியா மருத்துவமனைக்கு வித்தியாசமாக நன்றி செலுத்திய சசிகலா உறவினர்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த சில நாட்களாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சமீபத்தில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில் அந்த மருத்துவமனைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சசிகலாவின் உறவினர் ஒருவர் வித்தியாசமான முறையில் நன்றி செலுத்தி உள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சமீபத்தில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டார். அதுமட்டுமின்றி அவர் நுரையீரல் தொற்று, சர்க்கரை உள்ளிட்ட ஒருசில நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் அவர் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
அங்கு அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இருப்பினும் அவர் பெங்களூரில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் அவர் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் சசிகலாவுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்த விக்டோரியா மருத்துவமனைக்கு நன்றி செலுத்தும் விதமாக சசிகலாவின் உறவினரும் இளவரசியின் மகனுமான விவேக் ஜெயராமன் என்பவர் அந்த மருத்துவமனைக்கு சென்று ரத்ததானம் செய்தார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது