சிறையில் இருந்து விடுதலையானார் சசிகலா!

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த 2017ஆம் ஆண்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். இந்த நிலையில் அவருடைய சிறை தண்டனை காலம் முடிவடைந்ததை அடுத்து ஜனவரி 27-ஆம் தேதி அவர் விடுதலை செய்யப்படுவார் என்று சிறை நிர்வாகம் அறிவித்திருந்தது 

இதன்படி சசிகலா சற்றுமுன் விடுதலை ஆனதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவருடைய விடுதலை பத்திரம் அவர் சிகிச்சை பெற்று வரும் விக்டோரியா மருத்துவமனையில் வழங்கப்பட்டது.

sasikala

இந்த நிலையில் தற்போது பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் சசிகலா சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் சிகிச்சை முடிந்த பின்னரே அவர் சென்னை திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது 

தற்போது சசிகலாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் குறைந்துள்ளதாகவும் மருத்துவமனையில் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. சசிகலா அனேகமாக பிப்ரவரி 3ஆம் தேதி சென்னை வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web