"சசிகலா வழக்கு" கர்நாடக அரசுக்கு எச்சரிக்கை! ஹைகோர்ட் அதிருப்தி;

சசிகலா வழக்கில் கர்நாடக அரசுக்கு ஹைகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது
 
sasikala

தற்போது நம் தமிழகத்தில் எதிர்க் கட்சியாக உள்ளது அதிமுக. மேலும் எதிர் கட்சி அதிமுக தமிழகத்தில் பத்து ஆண்டுகளாக ஆட்சி செய்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது இந்த அதிமுக கட்சியில் கட்சிக்குள்ளேயே குழப்பம் அதிகமாக நிலவுகிறது. தொண்டர்கள் பலரும் இரண்டு விதமாக பிரிக்கப்பட்டனர் என்றே கூறலாம். இந்த  நிலையில் அதிமுக கட்சிக்கு அதிகமாக சவால் விடும் நிலைமையில் காணப்பட்டுள்ளார் சசிகலா.sasikala

சசிகலா யாரென்றால் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரின் தோழி ஆவார். இந்தநிலையில் சசிகலா சில வருடங்களாக சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை அணிவித்து வந்தார். மேலும் தேர்தல் சமயத்தை ஒட்டி அவர் விடுவிக்கப்பட்டார். ஆயினும் சசிகலா  குறித்து அவ்வப்போது சர்ச்சைகளும் எழுந்தன. இதுகுறித்து தற்போது கர்நாடக அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி லஞ்சம் தந்து சிறையில் சசிகலா சொகுசு வசதி பெற்றதாக கூறப்படும் வழக்கில் கர்நாடக அரசுக்கு ஹைகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. லஞ்சப் புகாரில் சிக்கிய சிறைத்துறை முன்னாள் டிஜிபி சத்தியநாராயணராவ் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் கேள்வி உள்ளது. மேலும் கிருஷ்ணகுமார் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காததால் பெங்களூரு உயர்நீதிமன்றம் அதிருப்தியை காட்டியுள்ளது. மேலும் முப்பது நாளுக்குள் காவல்துறை அதிகாரிகள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் நடவடிக்கை எடுக்காவிட்டால் கர்நாடக அரசின் முதன்மை செயலாளர் ரவிக்குமார் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் ஹை கோர்ட் கூறியுள்ளது.

From around the web