சுஷாந்த் சிங் தற்கொலை ஒரு பெரிய பிரச்சனையா? சரத்பவார் அதிரடி கருத்து

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டு இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட போதிலும் அவரது தற்கொலை இன்னும் விவாதிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் அவரது தற்கொலைக்கு காரணமாக பல பாலிவுட் பிரபலங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு வருவதும் குறிப்பாக நடிகை ரியா மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது தற்கொலை குறித்து கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன என்பதும் சுஷாந்த் சிங் ரசிகர்கள் தொடர்ச்சியாக சமூக
 

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டு இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட போதிலும் அவரது தற்கொலை இன்னும் விவாதிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் அவரது தற்கொலைக்கு காரணமாக பல பாலிவுட் பிரபலங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு வருவதும் குறிப்பாக நடிகை ரியா மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது

தற்கொலை குறித்து கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன என்பதும் சுஷாந்த் சிங் ரசிகர்கள் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் இது குறித்த பதிவுகளை செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சுஷாந்த் தற்கொலை குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவார் அவர்கள் கூறியபோது ’ஒருவர் தற்கொலை செய்துகொண்டு இறந்தது என்பது துரதிர்ஷ்டவசமானது தான். ஆனால் அது ஏன் அதிகம் பேசப்படுகிறது என்று தெரியவில்லை. இது ஒரு பெரிய பிரச்சனை என்று நான் நினைக்கவில்லை. விவசாயிகள் தினந்தோறும் தற்கொலை செய்து கொள்வது குறித்து ஏன் யாருமே பேசுவதில்லை’ என்று தெரிவித்துள்ளார்

சரத்பவாரின் இந்த கருத்து குறித்து சமூக வலைதளங்களில் தற்போது காரசாரமாக விவாதம் செய்யப்பட்டு வருகின்றன

From around the web