பிக்பாஸ் நிகழ்ச்சியில் சமந்தாவா? பரபரப்பு தகவல்

கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் புகழ்பெற்று விளங்கும் நிகழ்ச்சியாக பிக்பாஸ் மாறி விட்டது என்பதும் தமிழில் ஏற்கனவே மூன்று சீசன்கள் முடிந்து விட்டது என்பதும், மூன்றையும் கமலஹாசன் தொகுத்து வழங்கினார் என்பதும் தெரிந்ததே மேலும் கொரோனா வைரஸ் பரபரப்பு முடிந்ததும் தமிழில் நான்காவது சீசன் ஆரம்பிக்க உள்ளதாகவும் இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் நான்காவது சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது இந்த நிலையில் தமிழைப்போலவே தெலுங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி பெரும் வரவேற்புடன் நடத்தப்பட்டு வருகிறது.
 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சமந்தாவா? பரபரப்பு தகவல்

கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் புகழ்பெற்று விளங்கும் நிகழ்ச்சியாக பிக்பாஸ் மாறி விட்டது என்பதும் தமிழில் ஏற்கனவே மூன்று சீசன்கள் முடிந்து விட்டது என்பதும், மூன்றையும் கமலஹாசன் தொகுத்து வழங்கினார் என்பதும் தெரிந்ததே

மேலும் கொரோனா வைரஸ் பரபரப்பு முடிந்ததும் தமிழில் நான்காவது சீசன் ஆரம்பிக்க உள்ளதாகவும் இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் நான்காவது சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் தமிழைப்போலவே தெலுங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி பெரும் வரவேற்புடன் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சிகளை இதுவரை நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கிய நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசனை அவருடைய மருமகளும் பிரபல நடிகையுமான சமந்தா தொகுத்து வழங்க இருப்பதாக தெலுங்கு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் மிகக் குறைந்த அளவே திரைப்படங்கள் சமந்தாவுக்கு உள்ளதால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதிலும் சிக்கல்கள் எதுவும் இருக்காது என்றும் கூறப்படுகிறது

ஆனால் இந்த செய்தியை நாகார்ஜுனா மற்றும் சமந்தா தரப்பில் இருந்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை. சமந்தா பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்ற அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளிவரும் வரை பொறுத்திருப்போம்

From around the web