முக்கிய அறிவிப்பு:சேலம் அரசு போக்குவரத்து கழகம் அதிரடி தகவல்கள் !

சேலம் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் செல்லப்படும் பேருந்துகள் நேரம் குறித்தான தகவல்கள் வெளியாகி உள்ளது!
 
முக்கிய அறிவிப்பு:சேலம் அரசு போக்குவரத்து கழகம் அதிரடி தகவல்கள் !

தமிழகத்தில் சில தினங்களாக ஆட்கொல்லி நோயான கொரோனாநோயின் தாக்கம் மீண்டும் எழுந்து உள்ளது.  தமிழகத்தில் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் குறிப்பாக தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் தினம் தினம் கொரோனாவின் பாதிப்பானது மிக உயர்ந்து அங்குள்ள மக்களை மிகுந்த சோகத்தில் தள்ளியுள்ளது. சென்னை மாநகரத்தில் உள்ள அதிகாரிகள் பலரும் தடுப்பு நடவடிக்கைகளில் மிகவும் மும்முரம் காட்டிக் கொண்டு வருகின்றனர்.இதன் மத்தியில் தமிழக அரசானது சில தினங்களுக்கு முன்பு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது.

bus

ஆயினும் தற்போது நாளை முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரவு நேர ஊரடங்கு இன் போது எந்த ஊரும் போக்குவரத்தும் இருக்காது என்றும் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது. இதற்காக தற்போது போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் இன்று காலை சென்னை போக்குவரத்து கழகம் தகவல்களை வெளியிட்டுள்ளது. தற்போது அதனைத்தொடர்ந்து சேலம் போக்குவரத்து கழகமும் சில தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி சேலத்தில் இருந்து சென்னை பேருந்துகள் காலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயக்கப்படும் என்றும் கூறி உள்ளது. மேலும் சேலத்தில் இருந்து பெங்களூர் பேருந்துகள் காலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இயக்கப்படும் என்றும் கூறியுள்ளது. இதுபோன்று திருச்சி கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு காலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே போக்குவரத்து சேவை நடைபெறும் என்றும் கூறியுள்ளது. மேலும் கோவை திருப்பூர் மாவட்டங்களில் காலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே போக்குவரத்து சேவை நடைபெறும் என்றும் சேலம் போக்குவரத்து கழகம் திட்டவட்டமாக முடிவெடுத்துள்ளது. மேலும் இரவு நேர ஊரடங்கு அமல் இந்நிலையில் தற்போது சேலம் போக்குவரத்து கழகம் இவ்வாறு அறிவித்துள்ளது.

From around the web