ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் திடீர் மாற்றம்!

 

சேலம் கிழக்கு மாவட்டம் ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் திடீரென மாற்றப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சமீபத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் வேட்பாளர் பட்டியலை அறிவித்து இருந்த நிலையில் அந்த வேட்பாளர் பட்டியலில் சேலம் கிழக்கு மாவட்டம் ஆத்தூர் தனி தொகுதியில் திமுக வேட்பாளராக திருமதி ஜீவா ஸ்டாலின் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது

இதனையடுத்து ஜீவா ஸ்டாலின் தேர்தல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் தற்போது திடீரென அந்த தொகுதியின் வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளதாக திமுக தலைமை கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: 

சேலம் கிழக்கு மாவட்டம் ஆத்தூர் தனித்தொகுதியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக போட்டியிட ஏற்கனவே திருமதி ஜீவா ஸ்டாலின் அவர்களின் பெயர் அறிவிக்கப்பட்டது தற்போது அதற்கு மாறாக சின்னத்துரை அவர்கள் ஆத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப் படுகிறது என கூறியுள்ளார் இந்த செய்தி குறிப்பில் வேட்பாளர் மாற்றுவதற்கான காரணம் என்ன என்பதை திமுக தலைமை கழகம் விளக்கம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

dmk

From around the web