ஊழியர்கள் இறந்தாலும் குடும்பத்தினர்களுக்கு சம்பளம்: டாடா நிறுவனம் அறிவிப்பு!

 
rathan tata

டாடா நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தால் அந்த ஊழியர் பணிநிறைவு காலம் வரை அவரது குடும்பத்திற்கு சம்பளம் வழங்கப்படும் என டாடா நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு டாடா நிறுவன ஊழியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர் 

கொரோனா பாதிப்பு காரணமாக அல்லல்படும் இந்தியாவுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருபவர் டாடா என்பது தெரிந்ததே. கொரோனா முதல் அலையின்போது ரூபாய் 1500 கோடி நிதி உதவி செய்தார் என்பதும் இரண்டாவது அலையின் போது ஆக்சிஜன் மற்றும் மருந்து பொருட்கள் ஏற்பாடு செய்து கொடுத்தார் என்பதும் தெரிந்ததே

tata

இந்த நிலையில்தான் டாடா நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி டாடா நிறுவனத்தின் ஊழியர்கள் கொரோனா காரணமாக உயிரிழந்தால் அவரது குடும்பத்திற்கு பணி நிறைவு காலம் வரை சம்பளம் வழங்கப்படும் என்றும் அது மட்டுமில்லாது குடும்பத்தினருக்கு தங்கும் வசதி செய்து தரவேண்டும் செய்து தரப்படும் என்றும் மருத்துவ வசதியும் செய்து தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவரின் குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலான செலவையும் டாடா நிறுவனம் ஏற்றுக் கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 

From around the web