முதல்வர் வேட்பாளராக சகாயம்: ஒருகோடி பேர் ஆதரவு

கடந்த சில ஆண்டுகளாக ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் ஓய்வு பெற்றவுடன் அல்லது பணியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வருவது அதிகரித்து வருகிறது
சமீபத்தில் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார் என்பதும் அவருக்கு தமிழக பாஜக துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
அதேபோல் விருப்ப ஓய்வு பெற்ற சகாயம் ஐஏஎஸ் விரைவில் அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சகாயம் ஐஏஎஸ் இன்று சென்னையில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த இருப்பதாகவும் இந்த பொதுக்கூட்டத்தில் அவர் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் சகாயம் நடத்தும் இந்த கூட்டம் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. இன்றைய கூட்டத்தில் அரசியலில் காலடி எடுத்து வைக்க போவதை அவர் உறுதி செய்வார் என்று தெரிகிறது. முன்னதாக முதல்வர் வேட்பாளராக சகாயத்தை முன்னிறுத்த ஆன்லைனில் நடத்தப்பட்ட வாக்கு சேகரிப்பில் அவருக்கு ஒரு கோடி பேர் வாக்களித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது