ஆறு ஆண்டு சம்பளம் முழுவதையும் சச்சின் என்ன செய்தார் தெரியுமா? ஒரு ஆச்சரிய தகவல்

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கடந்த ஆறு ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார் என்பது தெரிந்ததே. இவர் மாநிலங்களவையில் அதிகம் பேசவில்லை என்றாலும் கிராமங்களை தத்தெடுத்தல், எம்பி நிதியின் மூலம் கிராம வளர்ச்சிக்கு உதவுதல் என பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளாக எம்பியாக இருந்ததற்காக கிடைத்த சம்பளம் முழுவதையும் தற்போது சச்சின் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளில் அவருக்கு கிடைத்த சம்பளம் மற்றும் சலுகைகளின்
 

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கடந்த ஆறு ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார் என்பது தெரிந்ததே. இவர் மாநிலங்களவையில் அதிகம் பேசவில்லை என்றாலும் கிராமங்களை தத்தெடுத்தல், எம்பி நிதியின் மூலம் கிராம வளர்ச்சிக்கு உதவுதல் என பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளாக எம்பியாக இருந்ததற்காக கிடைத்த சம்பளம் முழுவதையும் தற்போது சச்சின் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளில் அவருக்கு கிடைத்த சம்பளம் மற்றும் சலுகைகளின் மதிப்பு ரூ.90 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சினின் இந்த நன்கொடை அறிவிப்புக்கு பிரதமர் அலுவலகம் நன்றி தெரிவித்துள்ளது. அதேபோல் சச்சினுக்கு சமூக வலைத்தளங்களிலும் பாராட்டுக்க குவிந்து வருகிறது

From around the web