சபரிமலையில் பெண்களுக்கும் அனுமதி: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படாத நிலையில் இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றின் தீர்ப்பு இன்று வெளியாஅகியுள்ளது. சபரிமலை கோவிலுக்குள் பெண்களை கட்டாயமாக அனுமதிக்க வேண்டும் என்று இந்த வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. இந்தத அமர்வில் இருந்த ஐந்து நீதிபதிகளில் நான்கு பேர் பெண்களை சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என்று தீர்ப்பு அளித்துள்ளனர். ஆண்களுக்கு பெண்கள் எந்த அளவிலும் குறைவானர்கள்
 

சபரிமலையில் பெண்களுக்கும் அனுமதி: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படாத நிலையில் இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றின் தீர்ப்பு இன்று வெளியாஅகியுள்ளது.

சபரிமலை கோவிலுக்குள் பெண்களை கட்டாயமாக அனுமதிக்க வேண்டும் என்று இந்த வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. இந்தத அமர்வில் இருந்த ஐந்து நீதிபதிகளில் நான்கு பேர் பெண்களை சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என்று தீர்ப்பு அளித்துள்ளனர்.

ஆண்களுக்கு பெண்கள் எந்த அளவிலும் குறைவானர்கள் அல்ல என்றும் பெண்களுக்கு அனுமதி மறுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் கூறிய உச்சநீதிமன்றம், கடவுள் மற்றும் பக்தர்களுக்கு இடையில் உடல் மற்றும் உளவியல் காரணங்கள் கூறுவதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தனர்

இந்த நிலையில் சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்வோம் என திருவாங்கூர் தேவஸம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார்.

From around the web