முதல்முறையாக குறைந்த பக்தர்களுடன் சபரிமலை மகரஜோதி

 

சபரிமலை ஐயப்பன் கோவில் என்றாலே கார்த்திகை மாதம் விரதம் இருந்து மார்கழி மாதம் முழுவதும் பக்தர்கள் ஐயப்பனை வழிபட பக்தியுடன் வருவார்கள் என்பதும் குறிப்பாக தை மாதம் முதல் தேதி பொங்கல் தினத்தில் மகர ஜோதியை பார்ப்பதற்கு லட்சக்கணக்கானவர்கள் குவிந்து இருப்பார்கள் என்பதும் தெரிந்ததே 

ஒவ்வொரு வருடமும் மகரஜோதியை பார்ப்பதற்கென்றே கேரளாவில் இருந்து மட்டுமின்றி அண்டை மாநிலங்களான தமிழ்நாடு ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருவது உண்டு 

magara vilakku

இந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் இருந்ததன் காரணமாக சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு பல கெடுபிடிகள் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அவற்றில் ஒன்று தைத்திருநாளில் தோன்றும் மகர ஜோதியைக் காண்பதற்கு 5000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் மகரஜோதியை காணும் பக்தர்கள் முன்கூட்டியே ஆன்லைன் மூலம் பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது

அந்த வகையில் இன்று மகரஜோதி பார்க்க முன்கூட்டியே இணையதளம் மூலம் பதிவு செய்யப்பட்ட 5000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். சபரிமலை வரலாற்றில் முதல் முறையாக குறைந்த பக்தர்களுடன் மகரஜோதி தரிசனம் இன்று நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web