ஜூன் 9ஆம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் நிலையில் சமீபத்தில் மத்திய அரசு வழிபாட்டு தலங்கள் அனைத்தையும் திறக்க வழிகாட்டு முறைகளை வெளியிட்டது. இதன்படி ஜூன் 8ஆம் தேதிக்கு மேல் வழிபாட்டுத்தலங்கள் ஹோட்டல்கள் மால்கள் ஆகியவற்றை திறக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் மத்திய அரசு அறிவித்த வழிபாட்டு முறைகளின்படி மால்கள், ஹோட்டல்கள், வழிபாட்டுத்தலங்கள் ஆகியவற்றை திறக்க ஒரு சில மாநிலங்களில் தயாராகின்றன.
 
ஜூன் 9ஆம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் நிலையில் சமீபத்தில் மத்திய அரசு வழிபாட்டு தலங்கள் அனைத்தையும் திறக்க வழிகாட்டு முறைகளை வெளியிட்டது. இதன்படி ஜூன் 8ஆம் தேதிக்கு மேல் வழிபாட்டுத்தலங்கள் ஹோட்டல்கள் மால்கள் ஆகியவற்றை திறக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மத்திய அரசு அறிவித்த வழிபாட்டு முறைகளின்படி மால்கள், ஹோட்டல்கள், வழிபாட்டுத்தலங்கள் ஆகியவற்றை திறக்க ஒரு சில மாநிலங்களில் தயாராகின்றன. தமிழகத்திலும் வழிபாட்டுத்தலங்கள் ஜூன் 8ஆம் தேதி முதல் திறக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கேரளாவில் ஜூன் 9ஆம் தேதி முதல் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்படும் என்றும் சபரிமலை கோவிலில் 50 பேர் வரை வழிபாடு செய்ய அனுமதிக்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சபரிமலை ஐயப்பன் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்படுவதால் அனைத்து மத வழிபாட்டு அனைத்து மதத்தவர்களும் உற்சாகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web