கொரோனாவுக்கு எதிரான ரஷ்யாவின் தடுப்பூசி பாதுகாப்பானது: உலக சுகாதார நிறுவனம்

 

ரஷ்யா கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் வலிமையானது என உலக சுகாதார நிறுவனம் சான்றிதழ் அளித்துள்ளது

உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனாவை தடுப்பதற்காக தடுப்பூசியினை கண்டுபிடித்ததாக சமீபத்தில் ரஷ்யா அறிவித்தது. இந்த தடுப்பூசியை தனது மகளுக்கு பயன்படுத்தி பார்த்ததாக ரஷ்ய அதிபர் புதின் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த தடுப்பூசியை பயன்படுத்தியவர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டதாகவும் இதனால் இதன் பணிகள் நிறுத்தி வைக்கப் பட்டதாகவும் செய்திகள் வெளியானது

ஆனால் தற்போது மீண்டும் தடுப்பூசி பணிகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் விரைவில் இந்த தடுப்பூசியை மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் கொரோனாவுக்கு எதிரான ரஷ்யாவின் தடுப்பூசி பாதுகாப்பான மட்டுமல்ல வலிமையானது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே விரைவில் இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் இந்த தடுப்பூசியை பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web