தபால் வாக்குகளை திரும்ப எண்ணினால் எங்கள் கையில் ஆட்சி: தேஜஸ்வி

 

சமீபத்தில் நடைபெற்ற பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்த்து என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஆனால் அதே நேரத்தில் காங்கிரஸ் கூட்டணி நூலிழையில்தான் ஆட்சியை தவறவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது 

அதுமட்டுமின்றி தபால் ஓட்டுகளில் முறைகேடு நடந்ததாகவும் மீண்டும் தபால் ஓட்டுக்க்ளை எண்ணினால் நாங்கள்தான் ஆட்சியை பிடிப்போம் என்றும் காங்கிரஸ் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்விகூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

tesaswi

பல தொகுதிகளில் தபால் வாக்குகள் கடைசியில்தான் எண்ணப்பட்டதாகவும் எப்போதுமே முதலில் எண்ணப்படுவது வழக்கம் என்றும் ஒரு சில தொகுதிகளில் 900க்கும் அதிகமான தபால் வாக்குகள் செல்லாது என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவை அனைத்தும் எங்கள் கூட்டணிக்கு வந்த வாக்குகள் என்பதால் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாகவும் தேஜஸ்விகுற்றம்சாட்டி உள்ளார் 

எனவே 20 தொகுதிகளில் நாங்கள் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளோம் என்றும், அந்த தொகுதிகளில் மீண்டும் தபால் வாக்குகளை மட்டும் எண்ணினால் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து விடுவோம் என்று அவர் கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web