முதல்வர் பதவியை விட்டு கொடுக்க ரூ.500 கோடி பேரமா?  தங்க தமிழ்செல்வன் அதிர்ச்சி தகவல்

 

முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ரூபாய் 500 கோடி பேரம் பேசியதாக திமுகவில் சமீபத்தில் இணைந்த தங்கத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சமீபத்தில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்கு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஒப்புக்கொள்ள மாட்டார் என்று செய்திகள் வெளியான நிலையில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் தரப்பினர் விடிய விடிய நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் கடைசியில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த பிரச்சனை தீர்ந்ததாக முடிவு செய்யப்பட்டது

இந்த நிலையில் முதல்வர் வேட்பாளரை விட்டுக் கொடுத்ததற்கு பதிலாக தனது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என பன்னீர்செல்வம் நிபந்தனை விடுத்ததாக கூறப்பட்டது. ஆனால் சமீபத்தில் அமமுக கட்சியில் இருந்து திமுகவில் இணைந்த தங்கத்தமிழ்செல்வன் இதுகுறித்து கூறிய போது ’முதல்வர் வேட்பாளர் பதவியை விட்டு கொடுத்ததற்காக ரூபாய் 500 கோடியை பன்னீர்செல்வம் பெற்றுள்ளார் என்று கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்க தமிழ்செல்வன் கூறும் இந்த குற்றச்சாட்டுக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் தரப்பிலிருந்து என்ன விளக்கம் அளிக்கப்படுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web