தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ரூ.2000 அச்சடிப்பு நிறுத்தி வைப்பு! ரிசர்வ் வங்கி

 
ஒரு ரூ.2,000 நோட்டு கூட அச்சடிக்கப்படவில்லை: ரிசர்வ் வங்கியின் அதிர்ச்சி தகவல்

கடந்த ஆண்டை போலவே இந்த நிதி ஆண்டிலும் 2000 ரூபாய் நோட்டு புதிதாக அச்சடிக்கவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் 2000 ரூபாய் நோட்டு அச்சடிக்க தொடங்கிய நிலையில் ஒரு சில காரணங்களால் 2000 ரூபாய் நோட்டு அச்சடிக்கும் பணி கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டது. மேலும் இந்த நோட்டுகள் மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருப்பதும் குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

2020ஆம் நிதி ஆண்டைப் போலவே, 2020-21 நிதியாண்டிலும் 2,000 ரூபாய் நோட்டுகள் புதிதாக அச்சடிக்கவில்லை என்று ரிசர்வ் வங்கி தற்போது தெரிவித்துள்ளது. கடந்த 2020 மார்ச் மாதம் 5.48 லட்சம் கோடியாக இருந்த 2,000 நோட்டு புழக்கம், மார்ச் 2021ம் ஆண்டில் 4.9 லட்சம் கோடியாக சரிந்து விட்டதாகவும், 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டு வருவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது

2021 மார்ச் மாத நிலவரப்படி மொத்தமே 17.3 சதவீதம் மட்டுமே 2,000 ரூபாய் நோட்டுகள் புழகத்தில் இருந்ததாகவும், ஆனால் 2020ஆம் ஆண்டில் 22.6 சதவீதமாக இருந்தது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது

From around the web