வட்டியில்லாமல் ரூ.10,000: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு 

 

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பொருளாதார பாதிப்புக்கு உள்ளாகி கோடிக்கணக்கான மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு அறிவிப்புகளையும் சலுகைகளையும் வெளியிட்டு வருகிறது என்பது தெரிந்ததே 

அந்த வகையில் தற்போது மேலும் ஒரு சலுகையாக மத்திய அரசு ஊழியர்களுக்கு வட்டியில்லாமல் ரூபாய் பத்தாயிரம் வழங்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிவித்துள்ளார் 

பண்டிகை காலத்தையொட்டி முன்பணமாக பத்தாயிரம் ரூபாய் வட்டி இல்லாமல் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ரூபே கார்டில் வழங்கப்படும் அந்த தொகையை 2021 ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அதன் பின்னர் 10 தவணைகளில் ரூபாய் பத்தாயிரத்தை மத்திய அரசு ஊழியர்கள் திரும்ப செலுத்த வேண்டும் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார் 

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் இந்த சலுகையை மாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது

From around the web