பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கு தினமும் ரூ.100 ஊக்கத்தொகை: அரசு அறிவிப்பு!

 
 

கொரோனா வைரஸ் பாதிப்பு காலத்தில் பள்ளிகள் திறந்தும் பள்ளிகளுக்கு செல்வதற்காக ஒரு சில மாணவ மாணவிகள் அச்சம் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் அஸ்ஸாம் மாநிலத்தில் பள்ளிக்குச் செல்லும் மாணவிகளுக்கு தினமும் ரூபாய் 100 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

கொரோனா நேரத்தில் மாணவிகள் பள்ளிக்கு வருவதற்கு அச்சப்பட்டு வரும் நிலையில் அந்த அச்சத்தை தவிர்ப்பதற்காகவும் மாணவிகளின் கல்வி அறிவு அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு கூறியுள்ளது

students

அதுமட்டுமின்றி கல்வியில் சிறந்து விளங்கும் மாணவிகளுக்கு இலவசமாக இருசக்கர வாகனம் வழங்கும் திட்டமும் இருப்பதாகவும் இந்த திட்டம் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அசாம் மாநில அரசு தெரிவித்துள்ளது

அசாமில் பள்ளிக்குச் செல்லும் மாணவிகளுக்கு தினந்தோறும் 100 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதற்கு எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் பெற்றோர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web