அண்ணாமலைக்கு ரூ.1 கோடி பரிசு: விவசாயிகள் சவால் அறிவிப்பு!


​​​​​​​

 

ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து அதன் பின்னர் பணியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்ததன் மூலம் அரசியலில் குதித்தவர் அண்ணாமலை என்பது அனைவரும் அறிந்ததே. அவர் கட்சியில் இணைந்த ஒரு சில நாட்களிலேயே அவருக்கு தமிழக பாஜக துணைத் தலைவர் பதவியும் தேடி வந்தது என்பதும் விரைவில் அவர் மாநிலங்களவை எம்பி ஆகப் நியமனம் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது 

இந்த நிலையில் தமிழகத்தில் பாஜகவை வளர்க்க அவர் தீவிரமாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பதும் குறிப்பாக விவசாயிகளிடையே அவர் உரையாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கும்,மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சமீபத்தில் விவசாயிகளிடம் அண்ணாமலை தெரிவித்தார் 

இதனை அடுத்து விவசாயிகள் அண்ணாமலைக்கு எதிராக சவால் விட்டு அவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என விவசாயிகளிடம் அண்ணாமலை நிரூபித்து விட்டால் அவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு அளிக்கப்படும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் சவால் விடுத்துள்ளனர். இந்த சவாலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web