ரவுடியை கொலை செய்தவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை: கடலூரில் பரபரப்பு!

கடலூர் அருகே ரவுடி ஒருவரை தலையை துண்டித்து கொலை செய்தவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடலூரைச் சேர்ந்த வீரா என்ற ரவுடி மீது பல வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் நேற்று அவர் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கிருஷ்ணன் என்பவர் தான் வீராவை கொலை செய்தார் என்று கூறப்பட்ட நிலையில் இந்த கொலை வழக்கில் போலீசார் அவரை கைது செய்ய முயற்சித்தனர்.
இந்த நிலையில் போலீசார் கிருஷ்ணனை கைது செய்ய முயற்சிக்கும் போது திடீரென அவர் போலீசாரை தாக்கி விட்டு தப்பித்து ஓட முயன்றதாகவும் இதனையடுத்து போலீசார் தற்பாதுகாப்பிற்காக கிருஷ்ணனை என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
பண்ருட்டி அருகே புதுப்பேட்டை மலட்டாறு என்ற பகுதியில் நடந்த இந்த என்கவுண்டர் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியபோது ரவுடி வீராவை கொலை செய்து விட்டு கிருஷ்ணா தப்பி ஓடியபோது போலீசார் பிடிக்க முயன்றதாகவும் ஆனால் போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால் என்கவுண்டர் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
மேலும் கிருஷ்ணன் தாக்கியதில் போலீஸ் எஸ்ஐ ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த என்கவுண்டர் காரணமாக கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது