சின்னாளபட்டியில் பாமகவினர் சாலை மறியல் வாக்குப்பதிவு நிறுத்தம்!

தமிழகத்தில் வாக்கு பதிவானது இன்று காலையில் தொடங்கி மிகவும் தீவிரமாக நடைபெறுகிறது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் அழைக்கப்பட்டிருந்த நிலையில் வாக்காளர்கள் மிகவும் கவனத்துடன் தனது வாக்கினை செலுத்தி வருகின்றனர். மேலும் வாக்காளர்களுக்கு முகக்கவசம் ,கையுறை போன்றவையும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அவரது உடல்நிலையை கண்காணித்து அவர்களை வாக்கு பதிவு செய்ய அனுமதிக்கின்றனர்.

மேலும் வாக்குசாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் வாக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.மேலும் தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு இன்றைய தினம் நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி இன்று இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது .தமிழகத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் வாக்கு பதிவாகி உள்ளது.
மேலும் தமிழகத்தில் குறைந்த பட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் பதிவாகி உள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள பல பிரபலங்கள் வாக்குப்பதிவு செலுத்துகின்றனர். இந்நிலையில் ஒரு சில பகுதிகளில் அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி மேலும் தற்போது திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி கிராமத்தில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.இப்பகுதியில் திமுகவினர் பணம் பட்டுவாடா செய்வதாக பாமகவினர் அறிவித்த நிலையில் பாமகவினர் தற்போது சாலை மறியலில் ஈடுபட்டதால் சின்னாளப்பட்டியில் வாக்கு பதிவானது நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அப்பகுதியில் வாக்குகளின் எண்ணிக்கையும் குறைய வாய்ப்புள்ளதாகவும் வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.