ராசிபுரத்தில் பகுதியில் உள்ள பட்டணம் கிராமத்தில் வாக்குக்கு பணம் கேட்டு சாலை மறியல் போராட்டம்!

 பட்டணம் கிராமத்தில் வாக்குக்கு பணம் கேட்டு சாலை மறியல் போராட்டம் ஈடுபட்ட கிராம மக்கள்!
 

நாளைய தினம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் தேர்தலுக்கான வேலைப்பாடுகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நாளை நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் மக்களவை இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ளது. தமிழகத்தில் தேர்தல் ஆணையம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. மேலும் தேர்தல் பறக்கும் படையினர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் நகைகளையும் பணத்தையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.

police

வாகன பரிசோதனை ஈடுபட்டு வருகின்றனர் என்றுவாக்குக்கு பணம் வாங்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் ஆனது உத்தரவிட்ட நிலையில் தற்போது ஒரு பகுதியில் வாக்குக்கு பணம் கேட்டு மக்கள் போராடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்படி  மாவட்டம் ராசிபுரத்தில் பகுதியில் உள்ள பட்டணம் கிராமத்தில் வாழும் கிராம மக்கள் தங்களுக்கு பணம் தராமல் சென்றதாக சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதை அறிந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கண்டதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தப்பியோடினர்.

காவல்துறையினர் 5 பேரை பிடித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.ராசிபுரம் பகுதியில் சில அரசியல் கட்சியினர் பணம் வாக்குக்கு பணம் வழங்கினார். ஆனால் ராசிபுரத்தில் உள்ள பட்டணம் கிராம மக்களுக்கு வழங்காமல் சென்றதாக தகவல் வெளியானது.இவ்வாறு வாக்குக்கு பணம் கேட்டுப் போராடியது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

From around the web