கிடுகிடு உயர்வு! ஒரே நாளில் 685 பேர் பலி!இந்தியாவில் தொடரும் சோகம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.26 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது!
 

மக்கள் மத்தியில் ஆட்கொல்லி நோய் என்றாலே முதலில் அனைவருக்கும் நினைவு வருவது இந்த கொரோனா  நோய்தான்.  கொரோனா முதலில் சீனா நாட்டில் உருவானதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து சீன நாட்டிலிருந்து  கொரோனா  பல நாடுகளுக்கும் பரவியது. குறிப்பாக இந்தியாவிலும் கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே  கொரோனா பரவத் தொடங்கியது. இந்திய அரசானது நாடு முழுவதும் ஊரடங்கு திட்டத்தினை அமல்படுத்தியது.

corona

இந்நிலையில் தமிழகத்தில் சில நாட்களாக கொரோனா  தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். மேலும் அனைவர் மனதிலும் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்ற பயமும் உள்ளது. இந்நிலையில் தற்போது தமிழகம் மட்டுமின்றி இந்தியாவிலும் கொரோனா தொற்றானது அதிகரித்துள்ளதாக தகவல். மேலும் இந்திய அளவில் கடந்த 24 மணி நேரத்தில் காரணத்தினால் 685 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் உள்ளது.

மேலும் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1.26 லட்சம் பேருக்கு  இந்த கொரோனா  உறுதியான தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஒரே நாளில் 58 ஆயிரத்து 258 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தியாவில் 92.11 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். 1.30 சதவீதம் உயிரிழப்பு விகிதம் தகவல் வெளியாகியுள்ளது.மேலும் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும இல்லையா என்ற கேள்வியும் குழப்பமும் தமிழக மக்கள் மத்தியில் நிலவுகிறது.

From around the web