கல்வித்துறையில் பழிவாங்கும் நடவடிக்கையா

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சொல்லி பார்த்த அரசு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியது. பல புதிய ஆசிரியர்களை குறைந்த சம்பளத்தில் நியமிக்க துவங்கினர். இதனால் சிலர் வேலைகளில் இணைந்து பணியாற்ற துவங்கினர். இருப்பினும் பலர் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் தினைக்குளம் பள்ளியில் இருந்து மிக தூரமாக 70 கிமீ தொலைவில் உள்ள தங்கச்சி மடம் பள்ளிக்கு லிங்கராக் என்ற ஆசிரியர்
 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சொல்லி பார்த்த அரசு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியது. பல புதிய ஆசிரியர்களை குறைந்த சம்பளத்தில் நியமிக்க துவங்கினர்.

கல்வித்துறையில் பழிவாங்கும் நடவடிக்கையா

இதனால் சிலர் வேலைகளில் இணைந்து பணியாற்ற துவங்கினர். இருப்பினும் பலர் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் தினைக்குளம் பள்ளியில் இருந்து மிக தூரமாக 70 கிமீ தொலைவில் உள்ள தங்கச்சி மடம் பள்ளிக்கு லிங்கராக் என்ற ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி அலுவலரின் ஆர்டர் காப்பியோடு உள்ள நகல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

நேற்று மாலை புதுக்கோட்டை மாவட்டத்தில்  உயர் அலுவலரின் உத்தரவினை செயல்படுத்தாத 3 வட்டாரக்கல்வி அலுவலர்களை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வனஜா அதிரடி நடவடிக்கையாக   உயர் அலுவலரின் உத்தரவினை செயல்படுத்தாத மற்றும் கீழ் படியாத கந்தர்வக்கோட்டை வட்டாரக்கல்வி அலுவலர்கள் அலெக்ஸாண்டர், வெங்கடாசலம், அரிமளம் வட்டாரக்கல்வி அலுவலர் கே.ஞானக்கனி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.


இது போன்ற பழிவாங்கும் நடவடிக்கை கல்வித்துறையில் மட்டுமே நடப்பதால் அவர்களை மீண்டும் போராட அழைப்பது போல உள்ளதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

From around the web