ஓய்வுபெறும் மருத்துவர்களுக்கு பணி நீட்டிப்பு: தமிழக முதல்வர் அதிரடி
இன்று அதாவது மார்ச் 31ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் தமிழக அரசு மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு இரண்டு மாதங்கள் பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார் இன்று ஓய்வு பெறுபவர்கள் மேலும் இரண்டு மாதங்கள் தற்காலிகமாக பணி செய்யலாம் என அவர்களுக்கு தற்காலிக நியமனம் வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார் கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக இருக்கும் இந்த நேரத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பணி அவசியம் என்பதால்
Tue, 31 Mar 2020


இன்று அதாவது மார்ச் 31ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் தமிழக அரசு மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு இரண்டு மாதங்கள் பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார்
இன்று ஓய்வு பெறுபவர்கள் மேலும் இரண்டு மாதங்கள் தற்காலிகமாக பணி செய்யலாம் என அவர்களுக்கு தற்காலிக நியமனம் வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்
கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக இருக்கும் இந்த நேரத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பணி அவசியம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் முதல்வர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது