திருச்சி காந்தி சந்தையில் சில்லறைக் கடை வியாபாரங்கள் மூடல்!

திருச்சி காந்தி சந்தையில் இயங்கிவந்த சில்லரைகளை வியாபாரங்கள் பொன்மலை ஜிகார்னர் ரயில்வே மைதானத்திற்கு மாற்றப்பட்டது!
 
திருச்சி காந்தி சந்தையில் சில்லறைக் கடை வியாபாரங்கள் மூடல்!

கண்ணுக்குத் தெரியாமல் பல உயிர்களை வாங்கிக் கொண்டிருக்கும் ஒரு வைரஸ் கிருமி கொரோனா. கொரோனா  நட்பு நாடான சீனாவில் முதன் முதலில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலகம் முழுவதும் இந்த கொரோனா நோயானது கண்டறியப்பட்டது. மேலும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் கொரோனா அதிகரித்துள்ளன. இந்தியாவிலும் இந்த கொரோனா நோயானது அதிகரித்து வந்தன.இந்தியாவில் இந்த கொரோனா நோயானது முதன்முதலில் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் கண்டறியப்பட்டது.

corona

கொரோனா நோய் கண்டவுடன் முழு ஊரடங்கு திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தியது. அதன் பின்னர் இறுதியில் கொரோனா நோயின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியது,பின்னர் தற்போது கொரோனா நோயின் வீரியமானது அதிகரித்து வேகமாக பரவி வருகிறது. மேலும் கொரோனா நோயின் தாக்கம் அதிகம் உள்ளது. இதனால் மக்கள் மிகவும் சோகத்தில் அச்சத்தில் உள்ளனர் . தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி தமிழகத்தில் கவசம் அணிவது கட்டாயம் என்றும் விதித்துள்ளது.

திரையரங்குகளில் 50 சதவீத இருக்கையுடன் பார்வையாளருக்கு அனுமதி அளித்துள்ளது. மேலும் பொது இடங்களில் கூட்டம் போடுவது தவிர்க்கவும் கூறியுள்ளது. தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் தொடர்ந்து தற்போது அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர்கள் பல்வேறு விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் கூறுகின்றனர். திருச்சி மாவட்டத்தில் காந்தி சந்தையில் இயங்கி வந்த காய்கறி, பழங்கள், பூக்கள் விற்பனை செய்யும் கடைகள் மூடப்பட்டன. மேலும் காந்தி சந்தையில் இயங்கி வந்த இந்த சில்லறைக் கடைகள் திருச்சி பொன்மலை ஜி கார்னர் ரயில்வே  மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. திருச்சியில் சந்தை மற்றும் வணிக வளாகங்களில் கொரோனா  விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.

From around the web