ஒரு வாரத்திற்கு உணவகங்கள் மூடல்! "பார்சல் உணவும் கூட கிடையாது"!!

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்ப்புறங்களில் உள்ள ஹோட்டல்களில் பார்சல்  கூட வழங்கப்படாது என்று அறிவிப்பு!
 
parcel

தற்போது நம் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு மிகவும் கடுமையாக உள்ளது. மேலும் இந்த ஊரடங்கு தற்போது தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்ற திமுக கட்சி தலைவரான மு க ஸ்டாலின் அறிவித்தார்.அதன்படி தமிழகத்தில் தற்போது மூன்று வாரங்களாக ஊரடங்கு நடைமுறையில் உள்ளன மேலும் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இது ஊரடங்கு காலகட்டத்தில் பல்வேறு தன்னார்வலர்கள் தொண்டு நிறுவனங்கள் போன்றவைகள் உணவின்றி இருப்பவர்களுக்கு தங்களால் இயன்றதை அவ்வப்போது வழங்கி வருகின்றனர்.sriviliputhur

அவர்களுக்கு சமூக வலைதளங்களில் வரவேற்பும் பாராட்டுகளும் இருந்து வருகிறது. மேலும் அவர்கள் மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளுக்கும் உணவு வழங்குகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஹோட்டல்கள் மூடப்பட்டு உணவுகள் பார்சல் மட்டும் விநியோகிக்கப்படுகின்றன. தமிழகத்தில் ஒரு பகுதியில் தற்போது இந்த பார்சல் கூட விநியோகிக்க படாது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் முதல் ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் அங்கு கொரோனா நோய்த்தொற்று பரவுவதை தடுக்க ஒரு வாரத்துக்கு உணவகங்கள் முழுமையாக மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் புறங்களில் உள்ள ஹோட்டல்களில் பார்சல் உணவு வழங்கப்பட மாட்டாது என்றும் அறிவிப்பு வெளியாகிறது.

From around the web