சிக்கன் சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு! உணவக உரிமையாளர் கைது!!

ஆரணியில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டு சிறுமி உயிரிழந்தது அடுத்து கடை உரிமையாளர் உள்பட 20 பேர் கைது
 
7  star

தற்போது நம் தமிழகத்தில் அதிகமாக கலப்படம் காணப்படுகிறது. அதுவும் குறிப்பாக பலரும் கெட்டுப்போன உணவுகளை கூட புதிது போல சமைத்து கொடுக்கின்றனர். இதுகுறித்து உணவு துறை பாதுகாப்பு அதிகாரிகள் பல்வேறு ஹோட்டல்களில் தொடர்ந்து சோதனை செய்துகொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் ஆரணியில் ஹோட்டலில் பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த 15 கிலோ கெட்டுப்போன சிக்கன் எடுக்கப்பட்டது. பின்னர் அதனை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அழித்தனர்.death

மேலும் அந்த உணவகத்தில் சாப்பிட்ட பலருக்கும் வாந்தி மயக்கம் என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிக்கன் சாப்பிட்ட சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் அந்த கடை உரிமையாளர் உள்பட 2 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். தனியார் அசைவ உணவகத்தில் சாப்பிட்ட 39 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உணவகத்தில் சாப்பிட்டு வாந்தி மயக்கம் ஏற்பட்டு 10 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 7 ஸ்டார் என்ற அசைவ உணவகத்திற்கு சீல் வைத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். சிறுமி  உயிரிழந்ததை அடுத்து உணவக உரிமையாளர் அம்ஜத் பாஷா மற்றும் சமையல் மாஸ்டர் முனியாண்டி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான இருவர் மீதும் 3 பிரிவின் கீழ் ஆரணி நகர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

From around the web