"மேகதாது அணைகட்டுவதை எதிர்த்து" புதுவை பேரவையில் தீர்மானம்!!

மேகதாது அணை கட்டப்படுவதை எதிர்த்து புதுவை பேரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது
 
megathathu

தற்போது நம் தமிழகத்தில் உள்ள பல டெல்டா மாவட்டங்களுக்கு குடிநீர் காவிரி தான் காணப்படுகிறது. மேலும் இந்த காவிரி நீரானது கர்நாடக மாநிலத்தில் குடகு மலையில் இது உருவாகி வருகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்களின் விவசாயத்திற்கும் குடிநீராகவும் காணப்படுகிறது. இந்த நிலையில் முன்றைய கர்நாடக முதலமைச்சர் இந்த காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று கூறியிருந்தார். இதற்கு தமிழகத்தில் உள்ள பல தலைவர்களும் தொடர்ந்து எதிர்ப்பு  தெரிவித்தனர்.rangasamy

மேலும் இது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் நரேந்தி மோடியிடம் டெல்லியில் சந்தித்து  சில வாரங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.  தொடர்ந்து தற்போது தமிழகத்துக்கு ஆதரவாக புதுச்சேரி மாநிலம் உள்ளது தற்போது தெரியவந்துள்ளது. மேலும் மேகதாது அணை கட்டப்படுவதை எதிர்த்து  புதுவை பேரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அந்தப்படி கர்நாடகம் காவிரி குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை எதிர்த்து புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டினால் காரைக்கால் விவசாயிகள் நீர் கிடைக்காமல் பாதிக்கப்படுவது என்பதனால் அவர்கள் எதிர்ப்பதாகவும் கூறியுள்ளனர். கர்நாடகம் அணை கட்டுவதை ஒன்றிய அரசு தடுத்து நிறுத்துமாறு புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் ஏற்கப்பட்டது. முதலமைச்சர் ரங்கசாமி கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

From around the web