ரயில் கிளம்ப 5 நிமிடங்களுக்கு முன் கூட முன்பதிவு செய்யலாம்: அதிரடி அறிவிப்பு 

 

இன்று முதல் ரயில் கிளம்புவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பு கூட பயண டிக்கெட்டை உறுதி செய்யும் வகையில் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு முதல் ஐந்து நிமிடத்துக்கு முன்பு வரை முன்பதிவு செய்யலாம் என்றும் அதன் பின்னர் இரண்டாவது ஒரு சார்ட் தயாரிக்கப்படும் என்றும் ரயில்வே துறை குறிப்பிட்டுள்ளது 

ரயில் கிளம்பும் நேரத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 5 நிமிடங்களுக்கு முன்பு வரை ஆன்லைனில் அல்லது கவுண்டரில் பயணிகள் தங்கள் பயண டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்து பெற்று கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது

இதற்கு முன்னர் ரயில் கிளம்ப ஒரு மணி நேரத்திற்கு முன்னரே முன்பதிவு நிறுத்தப்பட்டு சார்ட் தயாரிக்கப்படும் என்றும், அதன்பின்னர் டிக்கெட்டுக்கள் இடம் இருந்தால் கவுண்டரில் மட்டுமே பெற்று கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

ரயில் கிளம்ப ஐந்து நிமிடங்களுக்கு முன் கூட முன்பதிவு செய்யலாம் என்ற இந்த புதிய நடவடிக்கைக்கு பயணிகளின் ஆதரவு குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web