மருத்துவ உயர்ப்படிப்பில் இட ஒதுக்கீடு: மாநில அரசின் முடிவை தடுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது

மருத்துவ உயர் படிப்பில் மாநில அரசு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து எடுக்கும் முடிவை தடுக்கும் அதிகாரம் மருத்துவ கவுன்சில் உள்பட யாருக்கும் இல்லை என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சற்று முன் இந்த வழக்கில் புதிய உத்தரவைப் பிறப்பித்த உச்சநீதிமன்றம் ’மருத்துவ உயர் படிப்பில் மாநில அரசு மருத்துவ மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க அதிகாரம் உண்டு என்று தெரிவித்துள்ளது. மாநில அரசின் இட ஒதுக்கீடு தடுக்க இந்திய
 

மருத்துவ உயர்ப்படிப்பில் இட ஒதுக்கீடு: மாநில அரசின் முடிவை தடுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது

மருத்துவ உயர் படிப்பில் மாநில அரசு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து எடுக்கும் முடிவை தடுக்கும் அதிகாரம் மருத்துவ கவுன்சில் உள்பட யாருக்கும் இல்லை என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சற்று முன் இந்த வழக்கில் புதிய உத்தரவைப் பிறப்பித்த உச்சநீதிமன்றம் ’மருத்துவ உயர் படிப்பில் மாநில அரசு மருத்துவ மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க அதிகாரம் உண்டு என்று தெரிவித்துள்ளது. மாநில அரசின் இட ஒதுக்கீடு தடுக்க இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் கிடையாது என உச்சநீதிமன்றம் அதிரடியாக குறிப்பிட்டுள்ளது

கிராம புறங்களில் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு முதுநிலை மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் குறித்த வழக்கில்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு வழங்குவதற்கு இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை என்றும் இட ஒதுக்கீடு அளிக்கும் விதிமுறைகள் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தை மீறுவதாக உள்ளதாகவும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் ஏற்கனவே இட ஒதுக்கீடு இருந்தால் இந்த தீர்ப்பு அதனை பாதிக்காது என்றும் முதுநிலை மாணவர்கள் சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் அனைத்து மாநில அரசுகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளன என்பதும் தங்கள் மாநில அரசு எடுக்கும் முடிவில் மருத்துவ கவுன்சில் தலையிட முடியாது என்ற உத்தரவின் காரணமாக மருத்துவ உயர்படிப்பு படிக்கும் கிராம புறங்களில் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்கள் திருப்தி அடைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web