"ஸ்டெர்லைட் மட்டுமின்றி பெல்" ஆக்சிசன் உற்பத்தி செய்ய கோரிக்கை!

திருச்சி பில்லில் ஆக்சிசன் உற்பத்தி செய்ய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவருக்கு திமுக எம்பி திருச்சி சிவா கடிதம் எழுதியுள்ளார்!
 
"ஸ்டெர்லைட் மட்டுமின்றி பெல்" ஆக்சிசன் உற்பத்தி செய்ய கோரிக்கை!

இன்று காலை முதலே தமிழகத்தில் மிகவும் பரபரப்பான சூழ்நிலை உள்ளது. காரணம் என்னவெனில் இன்று காலை முதலே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கட்சி கூட்டத்தில் திமுக பாஜக மற்றும் இடதுசாரிகள் போன்ற பலரும் கலந்து கொண்டிருந்தனர். மேலும் திமுக சார்பில் அக்கட்சியின் எம்பி கனிமொழி கலந்துகொண்டிருந்தார். பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் முருகன் கலந்துகொண்டிருந்தார். மேலும்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து கட்சிகளுடன் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறியிருந்தார்.oxygen

மேலும் அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிசன் உற்பத்தி செய்ய அனுமதி இருந்தன. மேலும் ஸ்டெர்லைட் ஆலையில் 4 மாத காலத்திற்கு ஆக்சிசன் உற்பத்தி செய்ய அனுமதிக்க உள்ளதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றும் கூறப்பட்டன. மேலும் ஸ்டெர்லைட் ஆலையில் 4 மாத காலத்திற்கு மின்சாரத்தை தமிழக மின்வாரிய துறை வழங்கும் என்றும் கூறினார்.  தற்போது ஸ்டெர்லைட் ஆலை மட்டுமின்றி தமிழகத்தில் மலைக்கோட்டை நகரமாக உள்ள திருச்சியில் இருக்கும் பெல் நிறுவனத்தில் உற்பத்தி செய்வதற்காக கோரிக்கை எழுந்துள்ளது.

இதனை திருச்சியின் திமுக எம்பி ஆன சிவா கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திருச்சி பெல் ஆக்சிசன் உற்பத்தி செய்ய கடிதம் எழுதியுள்ளார். மேலும் திருச்சி பெல் உள்ள மூன்று ஆக்சிசன் உற்பத்தி கூடங்களில் மணிக்கு 140 மெட்ரிக் கியூப் ஆக்சிசன் உற்பத்தி செய்யலாம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் கடந்த 2003ஆம் ஆண்டு முதல் திருச்சி பெல்லில் ஆக்சிஜன் உற்பத்தி நடைபெறவில்லை என்றும் தனது கடிதத்தில் திமுக எம்பி திருச்சி சிவா கூறியுள்ளார். மேலும் தற்போது உற்பத்தியை தொடங்கினால் 15 முதல் 20 நாட்களில் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு அது பயன் தரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

From around the web