கோயம்பேடு சிறு கடைகளில் வியாபாரம் செய்ய அனுமதிக்க கோரிக்கை!

சென்னை கோயம்பேடுஉள்ள சிறு கடை வைத்துள்ளார் வியாபாரம் செய்ய அனுமதிக்க கோரிக்கை!
 
கோயம்பேடு சிறு கடைகளில் வியாபாரம் செய்ய அனுமதிக்க கோரிக்கை!

மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி நொடிக்கு நொடி நோயை பரப்பும் நோயாக உள்ளது கொரோனா வைரஸ். இந்தியாவின் அண்டை நாடான சீனாவில் முதன் முதலில் கொரோனா தோன்றியது. அதன் பின்னர் அமெரிக்கா, இத்தாலி ,பிரான்ஸ் போன்ற பல நாடுகளில் கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியாவிலும் கொரோனா நோயானது 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வர தொடங்கியது. ஆனால் இந்திய அரசானது மக்களிடம் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடெங்கும் முழு ஒரு திட்டத்தை அமல்படுத்தியது.

corona
Caption

மேலும் கடுமையான நடவடிக்கைகளும் விதித்திருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டின் இறுதியில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால் தற்போது சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா தலைவிரித்தாடுகிறது. இந்தியாவில் தமிழகம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் கொரோனா தாக்கமானது அதிகமாக பரவுகிறது. மேலும் தமிழக அரசானது சில தினங்களுக்கு முன்பாகவே சில கட்டுப்பாடு விதிகளையும்  விதித்திருந்தது. அதன்படி கோவில்கள் 8 மணி வரை நடைபெற அனுமதித்தது. மேலும் வழிபாட்டுத்தலங்கள், ஊர் திருவிழாக்கள், தேரோட்டம் போன்றவை பத்தாம் தேதி முதல் நடைபெற தடை விதித்துள்ளது.

இந்த கட்டுப்பாட்டு விதிகளை பத்தாம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் தமிழக அரசின் சார்பில் அறிக்கை வெளியானது. மேலும் சென்னையிலுள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் சிறு வியாபாரிகள் வியாபாரம் செய்வதற்கு தடை விதித்துள்ளது. இதனால் அங்கு வியாபாரம் செய்யும் சிறு  வியாபாரிகள் வணிகர்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தற்போது கோயம்பேட்டில் உள்ள 150, 300 சதுர அடியில் கடை வைத்து வியாபாரம் செய்ய அனுமதிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். அரசின் கொரோனா  விதியைப் பின்பற்றி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

From around the web